இயக்குனர் ஷங்கரின் மருமகன் கார்த்திகேயன் யார் தெரியுமா?- இந்த நடிகையின் உறவினரா?
ஷங்கர்
பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கும் ஷங்கர் அவர்களின் வீட்டில் அண்மையில் ஒரு கல்யாண விசேஷம் நடந்துள்ளது.
தனது மகள்களை டாக்டருக்கு படிக்க வைத்துள்ள ஷங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை விளையாட்டு வீரர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
ஆனால் அவர் சில தவறுகள் செய்து சிக்கிய நிலையில் அந்த திருமணமே வேண்டாம் என ஐஸ்வர்யா ரத்து செய்து விவாகரத்து பெற்றார்.
இந்த நிலையில் தனது மகளுக்கு உடனடியாக மாப்பிள்ளை பார்த்து மறுமணம் செய்து வைத்துள்ளார்.
மணமகன் யார்
ஐஸ்வர்யா திருமணம் செய்திருக்கும் மணமகன் தருண் கார்த்திகேயன், இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் என்று தான் இதுவரை கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவர் ஷங்கர் உதவியாளர் இல்லையாம்.
அமெரிக்காவில் ஐடி படித்தவர், இவரது அப்பா அங்கு ஐடி கம்பெனி நடத்தி வருகிறார். இயக்குனர் ஹரியும், தருணின் தந்தையும் நண்பர்கள், சினிமா ஆசையால் இந்தியா வந்தவர் ரத்னம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
தருண் பிரபல நடிகை நளினியின் உறவினரும் ஆவார்.
You May Like This Video