இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் அதிதி ஷங்கர்.. அவரே கூறிய லேட்டஸ்ட் தகவல்
ஷங்கர்
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாக இப்படம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 130 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3, கேம் ஜேஞ்சர் என ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் அடுத்தது வெளிவரவுள்ளது. இந்த நிலையில் வேள்பாரி படத்தை விரைவில் எடுக்கப்போவதாகவும் ஷங்கர் கூறியிருந்தார்.
ஷங்கர் இயக்கத்தில் அதிதி
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கரிடம் 'அதிதி ஷங்கரை எப்போது உங்களுடைய இயக்கத்தில் பார்க்கலாம்' என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த இயக்குனர் ஷங்கர் "கண்டிப்பாக பார்க்கலாம், அவருக்கென்றே ஒரு கதாபாத்திரம் தயாராக இருக்கிறது. ஒரு தந்தையாக இல்லாமல், எனக்குள் இருக்கும் இயக்குனர் தான் அதிதியிடம் நடிகைக்கான அம்சங்கள் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தேன்." என கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
