ஷங்கர் இயக்கும் 'வேள்பாரி'.. இணையும் 2 முன்னணி தமிழ் ஹீரோக்கள்! யார் பாருங்க
இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்திற்கு பிறகு தெலுங்கில் கேம் சேஞ்சார் என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்தியன் 3 படத்தின் சில பகுதிகளும் ஷூட்டிங் செய்யப்பட வேண்டி இருக்கிறது. கேம் சேஞ்சர் ரிலீசுக்கு பிறகு அவர் இந்தியன் 3 பணிகளை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஷங்கர் தான் வாங்கி வைத்திருக்கும் வேள்பாரி நாவலின் உரிமையை மீறி, சில படங்களில் அனுமதி இல்லாமல் அதன் காட்சிகளை பயன்படுத்துகிறார்கள் என சமீபத்தில் கோபமாக ஷங்கர் ஒரு ட்வீட் பதிவிட்டு இருந்தார்.
விக்ரம் - சூர்யா
இந்நிலையில் ஷங்கர் வேள்பாரி கதையை விரைவில் படமாக்கிவிட வேண்டும் என தற்போது முடிவெடுத்து இருக்கிறாராம்.
அதற்காக விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோர் உடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
படம் உறுதியானால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக அது இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri
