இயக்குனர் ஷங்கருடன் ஒரே ஒரு முறை தான் இணைந்தார்.. பிரபல நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள்

By Kathick Apr 22, 2024 03:45 AM GMT
Report

ஷங்கர் 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் கேம் சேஞ்சர்.

இயக்குனர் ஷங்கருடன் ஒரே ஒரு முறை தான் இணைந்தார்.. பிரபல நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள் | Shankar Movie Actress Getting Lots Of Movie Chance

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் தான் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவருக்கு கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் கூட தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் கியாரா அத்வானி, கேம் சேஞ்சர் படத்தின் மூலம் தான் முதல் முறையாக ஷங்கருடன் இணைந்தார்.

இயக்குனர் ஷங்கருடன் ஒரே ஒரு முறை தான் இணைந்தார்.. பிரபல நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள் | Shankar Movie Actress Getting Lots Of Movie Chance

இந்த நிலையில், ஷங்கர் படத்தை தொடர்ந்து இவருக்கு பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

குவியும் பட வாய்ப்புகள்

ஆம், கே.ஜி.எப் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவர் நடிப்பில் தற்போது டாக்சிக் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி கமிட்டாகியுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தில் கியாரா அத்வானி தான் ஹீரோயின் என பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இயக்குனர் ஷங்கருடன் ஒரே ஒரு முறை தான் இணைந்தார்.. பிரபல நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள் | Shankar Movie Actress Getting Lots Of Movie Chance

தந்தை விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மகன் சஞ்சய், மகள் திவ்யா செய்த விஷயம்! புகைப்படம் இதோ

தந்தை விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மகன் சஞ்சய், மகள் திவ்யா செய்த விஷயம்! புகைப்படம் இதோ

இதுமட்டுமின்றி பெரும் எதிர்பார்ப்பில் உருவாகவுள்ள வார் 2 திரைப்படத்திலும் கியாரா அத்வானி தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US