ஷங்கரின் அடுத்த பட ஷூட்டிங்கில் இருந்து கசிந்த புகைப்படம், இணையத்தில் வைரல்..
இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 2.0 திரைப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இவர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்த நிலையில் அப்படத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து RC15 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இப்பொது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் தற்போது அதன் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதில் ராம் சரணின் கெட்டப்பை கண்ட ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
