ஷங்கரின் அடுத்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரூ.180 கோடி லாபம்!
இயக்குனர் ஷங்கர் இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர், இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான 2.0 திரைப்படம் தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படமாக திகழ்ந்து வருகிறது.
மேலும் அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் திடீரென பாதியிலே நிறுத்தப்பட்டது, சமீபத்தில் அப்படம் மீண்டும் தொடங்கும் எனவும் ஒருசில தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் ராம் சரணை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அப்படம் பான்-இந்தியன் திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எப்போதே பெரியளவில் இருந்து வருகிறது என்றே கூறலாம்.
பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் பட்ஜெட் 170 கோடி இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தின் அனைத்து மொழிகளுக்கான திரையரங்கு, சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை ரூ. 350 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.