இயக்குனர் ஷங்கர் மீது தொடரப்படவுள்ள வழக்கு! அந்நியன் பட ரீமேக்கால் வந்த புதிய சிக்கல்

bollywood shankar remake anniyan
By Jeeva Apr 15, 2021 09:05 AM GMT
Report

இயக்குனர் ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்புகளாக உள்ளது.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அந்நியன், பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படம் தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

இதனிடையே இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். மேலும் அப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

 ஆனால் தற்போது இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் இயக்குநர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும்.

மேலும் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ள நிலையில், தன்னிடம் முறையான தடையில்லா சான்று பெறவில்லை என வழக்கு தொடரவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US