திரையரங்கில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.. OTT-யில் பட்டையை கிளப்பும் சக்தி திருமகன்.. பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
சக்தி திருமகன்
விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் சக்தி திருமகன். அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் செல் முருகன், கண்ணன், வாகை சந்திரசேகர், திரிப்தி ரவீந்திரா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு திரையரங்கில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லையோ என்கிற கேள்வி உள்ள நிலையில், OTT-க்கு வந்தபின் பலரும் அப்படத்தை பாராட்டி வருகிறார்கள். இப்படியொரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்காமல் மிஸ் செய்துவிட்டோம் என்றும் கூறி வருகின்றனர்.
ஷங்கர் பாரட்டு
இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது எக்ஸ் தளத்தில் சக்தி திருமகன் படம் குறித்து ட்விட் செய்துள்ளார்.

"சக்தி திருமகன் படத்தை OTT-யில் பார்க்க நேர்ந்தது. சிந்தையை தூண்டும் படம். இயக்குநர் எழுப்பிய கேள்விகள் மிகவும் நியாயமானதாகவும், கவனிக்கத்தக்கதாகவும் இருந்தன. பல பிரச்னைகளை ஒரே படத்தில் விவாதித்திருக்கிறார்கள். எதிர்பாராத விதத்தில் கதை தீவிரமடைந்துகொண்டே இருந்தது. படத்தின் இயக்குநர் அருண் பிரபுவுக்கு ஹாட்ஸ் ஆஃப். விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
நூலகத் துறையிலும் Party Fund, தவெக அரசு மிகக் கடுமையாகத் தண்டிக்கும் - அமைச்சர் அருண்ராஜ் IBC Tamilnadu
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri