ஷங்கரின் அடுத்த பட ஷட்டிங் புகைப்படங்கள் லீக்! அதிர்ச்சியில் படக்குழு
இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை பாதியிலேயே நிறுத்தி இருக்கும் நிலையில் அடுத்து தெலுங்கு ராம் சரண் நடிக்கும் RC15 படத்தை இயக்கி வருகிறார். படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் பொது இடங்களில் அனுமதி உடன் நடைபெற்று வருகிறது. அதனால் ரசிகர்கள் அதிக அளவில் ஷூட்டிங்கை காண கூடிவிடுகின்றனர்.
சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ராம் சரண் இருக்கும் கெட்டப் புகைப்படம் இணையத்தில் கசிந்து வைரல் ஆகி இருக்கிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த படக்குழுவினர் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் இப்படி ஷூட்டிங் ஸ்டில்கள் இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகி இருக்கிறது.
Stylish @AlwaysRamCharan Anna#RC15 shooting in vizag pic.twitter.com/2BHD7RHBNl
— KALKI |RRCF COMRADE (@DhruvaKalki) May 5, 2022
இப்படி லீக் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முன்பே தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.