சினிமாவில் களமிறங்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகன்- என்ன படம், முழு விவரம்
சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்டத்தின் உச்சமாக தனது படங்களை இயக்கி ரசிகர்களை வியக்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர்.
ரஜினியை வைத்து அவர் இயக்கிய 2.0 படம் தான் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியாகி இருந்த படம். அடுத்தபடியாக கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்க ஆரம்பித்தார், ஆனால் படம் கொரோனா மற்றும் சில காரணங்களால் அப்படியே நிற்கிறது.
எனவே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரணுடன் கைகோர்த்து புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டார். அதேநேரம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக் படத்தை இயக்கவும் முடிவு செய்திருந்தார்.
ஆனால் இந்த இரண்டு படங்களின் வேலைகள் இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. இதற்கு நடுவில் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அது என்னவென்றால் அவரது மகன் புதிய படம் மூலம் ஹீரோவாக களமிறங்க உள்ளாராம்.
மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

10ஆம் வகுப்பு தேர்வில் 6 பாடத்திலும் பெயில் ஆன மாணவன் - கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர் IBC Tamilnadu
