மகளை தொடர்ந்து ஷங்கரின் மகனும் ஹீரோவாக அறிமுகம் ! அதுவும் எந்த படத்தில் தெரியுமா?
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக ஷங்கர் பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவர் இயக்கத்தில் ஏகப்பட்ட திரைப்படங்கள் மெகா ஹிட்டாகியுள்ளது.
2.0 திரைப்படத்திற்கு பின் ஷங்கர் தெலுங்கு திரையுலகின் டாப் நடிகரான ராம் சரணை வைத்து RC15 படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ஷங்கருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளார்கள். இவரின் இளைய மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு விரைவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். கார்த்திக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள விருமன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஷங்கரின் மகன் அர்ஜித்தும் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டிரெக்ஷன் கோர்ஸ் முடித்துள்ள அர்ஜித் தற்போது ஹீரோவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2004 ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான காதல் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் அர்ஜித் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இது குறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
