சிவகார்த்திகேயன் படத்தில் இயக்குநர் ஷங்கரின் வாரிசு.. எந்த படத்தில் தெரியுமா
ஷங்கர்
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் எனும் மெகாஹிட் படத்தை கொடுத்தார்.
இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றிய நிலையில், தற்போது ஷங்கரின் மற்றொரு வாரிசும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளார்.
அர்ஜித் ஷங்கர்
ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், சிவகார்த்திகேயனின் படத்தில் துணை இயக்குநராக தற்போது பணியாற்றி வருகிறார். ஷங்கரை போலவே அவரது மகனுக்கும் இயக்குநர் ஆகவேண்டும் என்று ஆசையாம். தன் மகன் தன்னுடைய படங்களில் பணியாற்றினால் சரி வராது என்பதால், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் சேர்த்துவிட்டாராம் ஷங்கர்.
அதன்படி, தற்போது முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் மதராஸி திரைப்படத்தில் துணை இயக்குநராக ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் பணியாற்றி வருகிறாராம்.