அமெரிக்க குடிமகன், சொந்த ஐடி நிறுவனம்.. இயக்குனர் ஷங்கரின் மாப்பிள்ளை பற்றிய முழு பின்னணி
இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா முதல் திருமணம் சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்த நிலையில் தற்போது தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
தருண் கார்த்திகேயன் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் என முன்பே தகவல் வெளியானது, ஆனால் அவர் ஷங்கருக்கு அசிஸ்டன்ட் ஆக பணியாற்றவில்லையாம்.
இயக்குனர் ஹரி உடன் ரத்னம் படத்தில் தான் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ஐஸ்வர்யா மற்றும் தருண் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டார்களாம்.
அவர்களின் திருமணத்தை ஷங்கர் மிக பிரம்மாண்டமாக நடந்தி முடித்திருக்கிறார். மேலும் வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா துறையினர் மற்றும் அரசியல் புள்ளிகள் பலரும் கலந்துகொண்டனர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மாப்பிள்ளையின் பின்னணி
ஷங்கரின் மாப்பிள்ளை தருண் பற்றிய முழு பின்னனியை தற்போது பார்க்கலாம். அவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில் தான். அந்த நாட்டின் குடிமகனாக இருந்து வருகிறார்.
அவர் குடும்பத்திற்கு அமெரிக்காவில் சொந்தமாக ஐடி நிறுவனம் இருக்கிறது. மேலும் அவரது அப்பாவின் நண்பர் இயக்குனர் ஹரி உடன் துணை இயக்குனராக சில மாதங்கள் பணியாற்றி இருக்கிறாராம்.
அவர் ஷங்கருக்கு அசிஸ்டன்ட் ஆக இருந்தார் என பரவிய தகவல்கள் எல்லாம் பொய் என்பது குறிப்பிடத்தக்கது.