ராஜமௌலியை மிஞ்சும் ஷங்கர்.. அடுத்த பட பட்ஜெட் இத்தனை கோடியா?
ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர். திரையில் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்க்காக பெரிய அளவில் செலவு செய்து பிரம்மாண்டமாக படம் எடுப்பார். தற்போது கமலுடன் இந்தியன் 2 மற்றும் ராம் சரண் உடன் RC 15 ஆகிய படங்களில் பிசியாக இருக்கிறார் ஷங்கர்.
இந்நிலையில் அடுத்து ஷங்கர் ஒரு வரலாற்று புனைவு நாவல் கதையை வைத்து படம் எடுக்க இருக்கிறார். வேள்பாரி கதை தான் அது என சொல்லப்படுகிறது.

பட்ஜெட்
இந்த கதையில் சூர்யா மற்றும் கேஜிஎப் ஹீரோ யாஷ் ஆகியோர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், படத்திற்காக 1000 கோடி பட்ஜெட் எனவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க ஷங்கர் முடிவு செய்திருக்கிறாராம். அது மட்டும் நடந்தால் பாகுபலி விட மிக பிரம்மாண்டமாக படம் இருக்கும் என தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

தொழிலதிபருக்கு இரண்டாம் மனைவியாகும் ஹன்சிகா.. முதல் திருமணத்தில் அவரே கலந்துகொண்ட வீடியோ