தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம்
வேள்பாரி
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தோல்வியை தழுவின. இதை தொடர்ந்து இந்தியன் 3 படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வேள்பாரி படத்தை இயக்கப்போவதாக ஷங்கர் கூறினார்.

வேள்பாரி
எந்திரன்தான் தனது கனவு திட்டம் என்று நினைத்தேன், ஆனால், இப்போது அப்படி இல்லை. வேள்பாரிதான் தற்போது என்னை மிகவும் ஊக்கப்படுத்தும் படம். அது 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' அல்லது 'அவதார்' போன்ற உலக தரத்திலான படமாக இருக்கும் என சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்தியன் 3 படத்தின் பணிகளை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வேள்பாரி படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க சூர்யா அல்லது விக்ரமுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாம். ஆனால், எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், வேள்பாரி படத்தின் பட்ஜெட் ரூ. 1000 கோடி என கூறப்படுகிறது. இது உண்மை என்றால் ஷங்கர் இயக்கத்தில் உருவான படங்களில் மிகப்பெரிய பட்ஜெட் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.