உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!! ஹீரோ யார் தெரியுமா..?
ஷங்கர்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து இந்தியன் 3 படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதைப்பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை. சிலர், இப்படம் வெளிவருவதற்கு வாய்ப்பு குறைவுதான் என்கின்றனர். இப்படியொரு சூழலில் ஷங்கரின் கனவு படமான வேள்பாரி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வேள்பாரி
இயக்குநர் ஷங்கர் தற்போது வேள்பாரி படத்திற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கியுள்ளாராம். மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகவிருப்பதால், இப்படத்தை மும்பையை சேர்ந்த Pen ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது.

பட்ஜெட் ஒர்க்ஸ் முடிந்தபிறகு, வேள்பாரி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்கின்றனர். ஆனால், இப்படத்தில் ஹீரோவாக யார் நடிக்கப்போகிறார் என தெரியவில்லை. இதற்கு முன் வெளிவந்த தகவலின்படி சூர்யா, விக்ரம், ரன்வீர் சிங் ஆகியோரின் பெயர்கள் இதில் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.