கடைசிவரை நிறைவேறாமல் போன கேப்டன் விஜயகாந்த் ஆசை... முதன்முறையாக கூறிய சண்முக பாண்டியன்
விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் வலம்வந்த பல பிரபலங்களை நம்மால் மறக்கவே முடியாது. அப்படி என்றும் நம் நினைவில் நிலைத்து இருப்பவர் தான் கேப்டன் விஜயகாந்த்.
சமீபத்தில் அவரது நினைவுநாள் வந்தது, அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் அவரது நினைவிடத்திற்கு வந்து பிராத்தனை செய்துவிட்டு சென்றனர்.

சண்முக பாண்டியன்
இந்த நிலையில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கொடுத்த ஒரு பேட்டி வலம் வருகிறது. அவர் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
அப்படம் வெளியாகி ரூ. 3 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. கொம்பு சீவி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சண்முக பாண்டியன் பேசும்போது நிறையவேறாமல் போன தனது அப்பாவின் ஆசை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், நானும் என் அண்ணனும் திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என்றில்லை. அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போதே அண்ணனுக்கு திருமணம் செய்துவைக்க நினைத்தார். நிறைய பெண் பார்த்தார்கள், செட் ஆகவில்லை.
பின் அண்ணா அரசியலில் இறங்க நானும் அம்மாவும் அப்பாவை பார்த்துக்கொண்டோம். இதனால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்றார். அப்பா திருமணம் செய்துவைக்க மிகவும் ஆசைப்பட்டார், ஆனால் கடைசிவரை நடக்கவில்லை என கூறியுள்ளார்.