வடிவேலு மாமா பற்றி அப்பா சொன்னது இதுதான், அவர் வருத்தத்தில் இருந்தபோது.. சண்முக பாண்டியன் ஓபன் டாக்
சண்முக பாண்டியன்
மறைந்த கேப்டன் விஜயகாந்த் முதல் மகன் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.
அவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் படங்களில் நடித்து வருகிறார். சண்முக பாண்டியன் படைத்தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார், பல வருடங்களாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையிர் ரிலீஸிற்கு தயாராகிவிட்டது.
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள நடைபெற்றது.
வடிவேலு
அப்போது சண்முக பாண்டியனிடம் வடிவேலு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், வடிவேலு சாருக்கு ஆரம்பத்தில் அப்பா உதவிகள் செய்திருந்தார், ஆனால் அவருடைய திறமையால் தான் முன்னுக்கு வந்தார்.
அப்பாவை விமர்சனம் செய்து பேசியது தவறுதான், அது எங்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.
வடிவேலு சார் இப்படி பேசிவிட்டார் என்றதும் அப்பா முதலில் வருத்தப்பட்டார், பிறகு சரி அவன் நிலைமை எப்படியோ அதனால் அவன் அபசி விட்டார், விட்டுவிடுங்கள் என்றார். அப்பா அப்படி சொன்ன பிறகு நாங்கள் பேசக்கூடாது.
அப்பா ஏதாவது டென்ஷனா இருந்தா கூட வடிவேலு காமெடியை பார்ப்பார். என் படத்தில் வடிவேலு அவர்களை நடிக்க வைக்கலாம் என நினைத்தோம், அப்பாவும் ஓகே சொன்னார்.
ஆனால் எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும் என நினைத்ததால் அவரிடம் பேசவில்லை.
வடிவேலு பட வாய்ப்புகளை அப்பா தடுத்தது இல்லை, ஏதாவது வாய்ப்பு வந்தால் கூட வடிவேலுவிடம் பேசிப் பாருங்கள் என்று தான் அனுப்பி வைப்பார் என சண்முக பாண்டியன் பேசி இருக்கிறார்.

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
