விஜயகாந்த் மகன் நடித்துள்ள படைத்தலைவன் படத்தின் 5 நாட்கள் வசூல் விவரம்.. இதோ
படைத்தலைவன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் சண்முக பாண்டியன். கேப்டன் விஜயகாந்தின் இளைய மகனான இவர், கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த சகாப்தம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார். இப்படத்திற்கு பின் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து சண்முக பாண்டியன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் படைத்தலைவன்.
அறிமுக இயக்குநர் அன்பு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளிவந்த இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல்
இந்நிலையில், 5 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் படைத்தலைவன் படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 5 நாட்களில் ரூ. 4.4 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan