பாஜக முடிவு பண்ணிட்டாய்ங்க.. தோக்கப்போறது உறுதி! ஜனநாயகன் பிரச்சனை பற்றி பிரபல இயக்குனர்
விஜய்யின் ஜனநாயகன் படம் சொன்னபடி ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகுமா இல்லையா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகி இருக்கிறது.
படத்திற்கு சான்றிதழ் தராமல் சென்சார் போர்டு காலம்தாழ்த்தி வருவதால் நீதிமன்றத்தை தயாரிப்பாளர் நாடிய நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9ம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதனால் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது பற்றி பிரபல இயக்குனர் சண்முகம் முத்துசாமி ஆவேசமாக X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். டீசல், பென்சில், க/பெ ரணசிங்கம் போன்ற படங்களை இயக்கியவர் தான் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக தோக்கப்போறது உறுதின்னு தெரிஞ்சுப்போச்சு..
"பாஜக முடிவு பண்ணிட்டாய்ங்க… நாம 2026 தேர்தல்ல தோக்கப்போறது உறுதின்னு தெரிஞ்சுப்போச்சு.. அதனால முடிஞ்ச அளவுக்கு தன்னோட கூட்டணிக்கு வராத விஜய் அவர்களின் கதையை முடிச்சுவிட பாக்கறாய்ங்க @BJP4India."
"ஒரு சினிமாக்காரனா இந்த 10 நாள் திரையரங்க வசூல் திரைத்துறைக்கு எவ்ளோ முக்கியம்னு எனக்கு நல்லாவே தெரியும்…! என் அரசியல் நிலைப்பாட்டை தாண்டி, நான் செய்கின்ற தொழில் சினிமா அதற்கு ஒரு சிக்கல் வருகிறது போது ஆதரவாக நிற்க வேண்டியது என் கடமை…! பாப்போம் தனது அரசியல் பயணத்துக்கு இடையூறு செய்யும் பாஜக வை விஜய் அவர்கள் எவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறார் என்று….?."
இவ்வாறு சண்முகம் முத்துசாமி பதிவிட்டு இருக்கிறார்.
பாஜக முடிவு பண்ணிட்டாய்ங்க …
— Shanmugam Muthusamy (@shan_dir) January 7, 2026
நாம 2026 தேர்தல்ல தோக்கப்போறது உறுதின்னு தெரிஞ்சுப்போச்சு….
அதனால முடிஞ்ச அளவுக்கு தன்னோட கூட்டணிக்கு வராத விஜய் அவர்களின் கதையை முடிச்சுவிட பாக்கறாய்ங்க @BJP4India
ஒரு சினிமாக்காரனா இந்த 10 நாள் திரையரங்க வசூல் திரைத்துறைக்கு எவ்ளோ முக்கியம்னு… pic.twitter.com/Ttcn7dF2AO