சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியை கவனிக்க ஆரம்பித்தேன், அப்போது.. சாந்தனு அதிரடி பேச்சு!
சாந்தனு
பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் சாந்தனு. இவர் நடிப்பில் கடைசியாக உருவாகி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
நடிகர் சாந்தனு பிரபல தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து 2015ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார்.
சாந்தனு அதிரடி!
இந்நிலையில், தற்போது இவரின் பேட்டி இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " நான் எப்போதும் சாந்தனுவாக தான் இருக்கிறேன். சாந்தனு பாக்யராஜாக அல்ல. என் அப்பாவால் தான் எனக்கு சக்கரக்கட்டி பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்படம் சரியாக போகவில்லை இதனால் எனக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அப்போது தான் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், மணிகண்டன் அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். இவர்களிடம் இருக்கும் கற்றல் மனப்பான்மைதான் என்னிடம் இல்லை என்பதை உணர்ந்தேன்.
இவர்களை எடுத்துக்காட்டாக வைத்து அடிமட்டத்தில் இருந்து வளர வேண்டும் என உழைக்கத் தொடங்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.