உங்க படத்தை பார்த்து பணம் வேஸ்ட் பண்ணனுமா: விமர்சித்தவருக்கு சாந்தனு கூலான பதில்
நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி ஜோடியாக நடித்திருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படம் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த படத்தின் ட்ரைலரே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த படம் பற்றி ட்விட்டரில் பேசி இருக்கும் சாந்தனு. "இது ஜஸ்ட் ஜாலி பொழுதுபோக்கு படம். intellectual minds இந்த படத்தை பார்கக முன்னுரிமை கொடுக்க வேண்டாம், உங்களுக்கு வாழ்க்கையில் இதைவிட அதிகமான intellectual விஷயங்கள் இருக்கும். மற்ற எல்லோரும் zero எதிர்பார்ப்புடன் வந்து பாருங்கள், உங்கள் மனஅழுத்தத்தை மறப்பீர்கள்" என சாந்தனு கூறி உள்ளார்.
அந்த ட்விட்டுக்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் "வெறும் பொழுதுபோக்கு படத்திற்கு ஏன் நாங்க பணத்தை வேஸ்ட் செய்ய வேண்டும்?" என கேட்டிருக்கிறார். அதற்கு பதில் கூறிய சாந்தனு, "அப்போ வேஸ்ட் பண்ணாதீங்க. சிம்பிள்" என கூறி உள்ளார்.
Then don’t waste ??♂️ simple
— Shanthnu ? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) December 6, 2021

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
