இது நடிகர் சாந்தனுவா? சத்திய சோதனை! - வைரலான போட்டோ பற்றி அவரே விளக்கம்
நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் ஹீரோவாக 2008ல் அறிமுகம் ஆனார். சோலோ ஹீரோவாக பெரிதாக ஜொலிக்க முடியவில்லை என்றாலும் தற்போது குணச்சித்திர ரோல்கள், மல்டி ஸ்டாரர் படங்கள் என அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
கடைசியாக அவர் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து இருந்தார்.
இது நான் இல்லை
இந்நிலையில் The Madras Mystery: Fall of a Superstar வெப் சீரிஸ் போட்டோவை பகிர்ந்த ஒருவர், அதில் இருப்பது சாந்தனு புது லுக் தான் என குறிப்பிட்டு இருக்கிறார்.
அது நான் அல்ல என கூறி இருக்கும் சாந்தனு, "Brother my name is Shanthnu. Pls search for my photos in google. My latest release was Bluestar" என சாந்தனு அதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
சத்தியசோதனை என கவுண்டமணி சொல்லும் வசனத்தை அவர் இதற்கு பதிலடியாகவும் கொடுத்து இருக்கிறார்.
Brother my name is Shanthnu 😊
— Shanthnu (@imKBRshanthnu) September 11, 2025
Pls search for my photos in google
My latest release was Bluestar https://t.co/0ZpkBM1uqU pic.twitter.com/T1hDV4pkJE