பாவாடை சட்டை போட்டு அச்சு அசல் கிராமத்து பெண்ணாக மாறிய சரண்யா துராடி! போட்டோ வைரல்
செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் சீரியல் நடிகையாக மாறியவர் சரண்யா துராடி. அவர் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். ஒரு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் சரண்யா விஜய் டிவியின் புது சீரியலில் நடித்து வருகிறார்.
சரண்யா துராடி ஹீரோயினாக நடிக்கும் வைதேகி காத்திருந்தாள் சீரியல் நேற்று முதல் ஒளிபரப்பை தொடங்கி இருக்கிறது. அதில் பொய் சொல்லி ஏமாற்று வேலைகள் செய்யும் பெண்ணாக தான் சரண்யா நடிக்கிறார்.
தற்போது வைதேகி காத்திருந்தாள் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சரண்யா பாவாடை மற்றும் பழைய சட்டை ஒன்றை அணிந்துகொண்டு அச்சு அசல் கிராமத்து பெண் போல மாறி இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.