அசிங்கப்படுத்திய விஜய் டிவி.. வேறு சேனலில் ஹீரோயின் ஆன சரண்யா துராடி
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் சீரியல்களில் முன்னணி நடிகையாக வளர்ந்தவர் சரண்யா துராடி. அவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சீரியலில் நடித்து இருக்கிறார்.
சன் டிவியில் பல சீரியல்கள் நடித்து இருக்கும் அவர், அதன் பிறகு விஜய் டிவியில் சில தொடர்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் வைதேகி காத்திருந்தாள் என்ற விஜய் டிவி தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார்.
ப்ரஜின் அந்த சீரியல் ஹீரோவாக நடித்த நிலையில் அது திடீரென நிறுத்தப்பட்டது. இது சரண்யா துராடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது சரண்யா துராடி ஜீ தமிழுக்கு தாவி இருக்கிறார். அவர் ஒரு புது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். அந்த தொடர் விரைவில் ஒளிபரப்பை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சியையும் சரண்யா ஜீ தமிழ் டிவியில் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.