கதாநாயகியாக அறிமுகமாகும் ஷாருக்கான் மகள்.. பாலிவுட்டில் அதிகமாகும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்
பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ஷாருக்கான்.
இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இவர் நடிக்கும் வெப் சீரிஸை பிரபல இந்தி இயக்குனர் ஷோயா அக்தர் இயக்குகிறார்.
இதில் இந்தி நடிகர் சயீப் அலிகான் மகன் இப்ராகிமும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இதில் நடிப்பதற்காக நடிகை சுஹானா கான் நடிப்பு பயிற்சியும் எடுத்து வந்துள்ளார்.
ஏற்கனவே இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள்ளது என்று விமர்சனங்கள் இருக்கும் நிலையில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிக்க வந்துள்ளது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.