இந்த போட்டோவில் இருப்பது ஷாருக் கான் இல்லையா! அச்சு அசல் அவரை போலவே இருக்கும் நபர்
பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவர் ஷாருக் கான். சில வருடங்கள் படம் நடிக்காமல் இருந்த ஷாருக் கான் தற்போது பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதில் நயன்தாரா தான் ஹீரோயின் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
டூப்ளிகேட் ஷாருக்கான்
இந்நிலையில் ஷாருக் கான் போலவே அச்சு அசலாக இருக்கும் நபர் ஒருவரின் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
அதை பார்த்து நெட்டிசன்கள் அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
இப்ராஹிம் என்ற இந்த நபர் பொது இடங்களுக்கு சென்றால் செல்பி எடுக்க கூட்டம் கூடிவிடுகிறார்களாம். சில நேரங்களில் போலீஸ் தான் வந்து இவரை காப்பாற்றி இருக்கிறார்கள். ஷாருக் கான் போலவே இருப்பதால் அவருக்கு இத்தனை கஷ்டங்கள்.

