பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் மீனா வேடத்தில் நடித்தது இவரா?- அவருக்கு நிச்சயதார்த்தமே முடிஞ்சிடுச்சு
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
சீரியல் கதையால் ஹிட்டடித்தாலும் இதில் நடித்த சித்ரா மறைவுக்கு பின் சீரியல் அதிகம் பிரபலமானது. சித்ராவின் மறைவை இன்னும் அவரது ரசிகர்களால் மறக்கவே முடியவில்லை.
அண்மையில் விஜய் டெலி அவார்ட்ஸில் சித்ராவிற்கு மக்களின் நாயகி என விருது கிடைத்தது.
இந்த சீரியலில் சித்ராவை தாண்டி இன்னொரு பிரபலத்தின் ஆள் மாற்றமும் நடந்துள்ளது.
முதலில் ஹேமா வேடத்தில் நடிகை கவிதா கௌடா. பெங்களூரைச் சேர்ந்த இவர் விஜய்யில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
தமிழில் நீலி தொடரில் நெகட்டீவ் வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் ஜீவாவின் மனைவி மீனா வேடத்தில் முதலில் இவர்தான் நடித்து வந்திருக்கிறார்.
பின் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு கிடைக்க சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.
தற்போது அவருக்கு சீரியல் நடிகர் சந்தன் குமார் என்பவருடன் கடந்த ஏப்ரல் 1ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்கள் இருவரின் திருமணம் வரும் மே மாதம் நடைபெற இருக்கிறதாம்.