நடிகை ஷகீலாவின் இரண்டாவது மகள் இவர் தானா - அவரே கூறியுள்ளாரே
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியான பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகைகளில் ஒருவர் ஷகீலா.
இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, தற்போது பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில், நடிகை ஷகீலா, தான் தத்தெடுத்து வளர்த்து வரும் தனது மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் அணைத்து குக் வித் கோமாளி போட்டியாளர்களும் தனது அம்மா, நண்பன், என தனது நெருங்கிய சொந்தங்களை கூட்டி வந்தனர்.
ஆனால் இதில் தனது அம்மாவை கூட்டி வரமுடியத்தால், கண்ணீர்விட்டு அழுதார் பவித்ரா.
அப்போது தானாகவே முன் வந்த நடிகை ஷகீலா, எனது முதல் மகள் மிலா, எனது இரண்டாவது மகள் பவித்ரா என கூறி அழுதுகொண்டிருந்த பவித்ராவின் அழுகையை நிறுத்தினார்.
ஷகீலாவின் இந்த மனதை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர்.