விஜய்யின் இந்த படத்தை ரீமேக் செய்தால் ஹீரோயின் இவர் தான்! பிரபல நடிகையின் ஆசை!
விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தை எட்டிவிட்ட மிக முக்கிய திரை நட்சத்திரம் என்று சொன்னால் மிகையாகாது. அவரின் படங்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடுகின்றன. குழந்தை நட்சத்திரமாக, ஹீரோவாக என பல படங்களில் நடித்துள்ள அவர் அவமானங்களை தோல்விகளை சந்தித்து தான் தற்போது வெற்றி நாயகனாக இருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக பல நடிகைகள் நடித்துள்ளனர். தங்கையாகவும் நடித்துள்ளனர். காதல், நட்பு வரிசையில் அவரின் முந்தைய படங்களில் பலவற்றை சொல்லலாம்.
இதில் பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் இரண்டுமே தனக்கு பிடித்த படங்கள் என பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ள அப்படத்தின் ஹீரோயின் சிம்ரன். தற்போது படங்களில் ரீ எண்ட்ரி கொடுத்து அம்மா, வில்லி கேரக்டர்களில் நடித்து வரும் அவர் பிரியானவளே, துள்ளாத மனமும் துள்ளும் படங்களை ரீமேக் செய்தால் அதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாம் என கூறியுள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, சிம்ரன், கீர்த்தி ஆகியோரின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.