30 வயது வித்தியாசம்.. நடிகர் பப்லுவை பிரிந்த காதலி! 'லைக்' மூலம் உறுதியான பிரேக் அப்
படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து அதன் பின் தற்போது சின்னத்திரை நடிகராக இருந்து வருபவர் பப்லு.
நடிகர் பப்லு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் முதல் மனைவியிடம் இருந்து பிரிந்துவிட்டார். அவருக்கு ஆட்டிசம் குறைபாடு கொண்ட மகன் ஒருவரும் இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ஷீத்தல் என்ற 30 வயது குறைந்த பெண் உடன் பப்லு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பேட்டி கொடுத்தார். பெண் சுகம் கேட்குதோ என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, ஆமாம் என்றும் அவர் பதில் அளித்தார்.
பிரிந்த காதலி
இந்நிலையில் தற்போது ஷீத்தல் பப்லுவை பிரிந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஜோடியாக இருந்த போட்டோக்களை நீக்கிவிட்டனர்.
'பிரிந்துவிட்டீர்களா' என நெட்டிசன் ஒருவர் போட்ட கமெண்டை ஷீத்தல் லைக் செய்திருக்கிறார். அதனால் அவர்கள் பிரிந்தது உறுதி ஆகி இருக்கிறது.
மேலும் பப்லு தனியாக பிறந்தநாள் கொண்டாடி இருக்கும் வீடியோவும் அவர்கள் பிரிவை உறுதி செய்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
You May Like This Video

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
