ஷெரீன் கொரொனா டெஸ்டில் நடந்த குளறுபடி..உண்மை இது தான்.

corona bigg boss sherin
By Kathick Aug 24, 2021 09:30 AM GMT
Report

தமிழில் துள்ளுவதோ இளமை, விசில் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின். இதன்பின் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து காணாமல் போயிருந்த நடிகை ஷெரின், மீண்டும் பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரிய துவங்கினார்.

இவர் சில தினங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அவர் வெளியிட்ட வீடியோவில், ''எனக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் லேசான பாதிப்பு மட்டுமே உள்ளது.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்'' என்று கூறியிருந்தார். இந்நிலையில் தனக்கு கொரோனா என்று பரிசோதனையில் தவறான தகவல் வந்து இருப்பதாக தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஷெரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " எனக்கு இப்போது இரண்டு முறை தொடர்ச்சியாக பரிசோதனை செய்தும் கொரோனா இல்லை என்று வந்துள்ளது.

இதற்கு முன்னால் செய்த பரிசோதனையில் வந்த கொரோனா தொற்று உள்ளது என்ற தகவல் பொய்யாக இருக்கலாம் என்று எனது மருத்துவர் தெரிவித்து உள்ளார். ஆனாலும் பாதுகாப்புக்காக சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டேன் " என்று தெரிவித்து உள்ளார். 

ஷெரீன் கொரொனா டெஸ்டில் நடந்த குளறுபடி..உண்மை இது தான். | Sherin Corona Test Result


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US