பல கோடி நட்சத்திர ஓட்டலை முடிகிறாரா ஷில்பா ஷெட்டி?.. அவரே உடைத்த விஷயம்!
ஷில்பா ஷெட்டி
பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
இவர் பிரபல தொழிலதிபரான ராஜ் குந்திராவை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் இவருக்கு சொந்தமாக நட்சத்திர ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இழுத்து முடிகிறாரா?
இந்நிலையில், தனது கணவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது அந்த ஓட்டலை இழுத்து மூட ஷில்பா ஷெட்டி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இதனை ஷில்பா ஷெட்டி மறுத்துள்ளார். அதில், " நட்சத்திர ஓட்டலை மூடப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது, அதேவேளை சிரிப்பாகவும் வருகிறது. இந்த தகவலில் எந்த உண்மையையும் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.