பொது இடத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த நடிகர்.. பெரும் சர்ச்சையில் சிக்கிய நடிகை..
விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஷில்பா ஷெட்டியை ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே பொதுமேடையில் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்.
இந்த முத்தக்காட்சி வீடியோ அப்போது மிகவும் சர்ச்சைக்குள்ளானது. இதனை தொடர்ந்து, பொதுஇடத்தில் முகம்சுளிக்கும் வகையில் நடந்துகொண்டதாக நடிகை ஷில்பா ஷெட்டி மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து அவர் நடிகை ஷில்பா ஷெட்டி சமர்பித்திருந்த மனுவில், ஹாலிவுட் நடிகர் முத்தமிட்டபோது தான் தடுக்கவில்லை என்றுதான் தன்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், ஆனால் வழக்குத்தொடர பயன்படுத்திய சட்டப்பிரிவுகளின்கீழ், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புகாரில் கூறப்பட்ட குற்றங்களில் ஒன்றுகூட திருப்தி அளிக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், புகார் அளிக்கப்பட்ட பிரிவுகளின்கீழ் அவர் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று கூறியதுடன் வழக்குகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனக்கூறி உத்தரவிட்டுள்ளது.