ஹோட்டல் தொழிலில் கோடிகளை குவிக்கும் ஷில்பா ஷெட்டி.. பணத்திற்காக அவரை திருமணம் செய்தாரா! - ட்ரோல்களுக்கு பதிலடி
நடிகை ஷில்பா ஷெட்டி ஹிந்தி சினிமாவில் 90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். தமிழில் அவர் குஷி, மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
அவர் தொழிலதிபர் ராஜ் குன்ரா என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் ராஜ் குந்திரா இந்திய பிரிட்டிஷ் பணக்காரர்கள் லிஸ்டில் 108ம் இடத்தில் இருந்தார். பணத்திற்காக தான் அவரை ஷில்பா திருமணம் செய்தார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ட்ரோல்களுக்கு பதிலடி
தன்னை பற்றி வரும் ட்ரோல்களுக்கு ஷில்பா ஷெட்டி பதிலடி கொடுத்து இருக்கிறார். எனக்கு பணம் முக்கியமில்லை. திருமணம் நடந்த போது நானும் rich தான். அதை googleல் தேட மறந்துவிடுகிறார்கள்.
"தற்போது ஹோட்டல் தொழிலில் கோடிகளில் சம்பாதிக்கிறேன். மும்பையில் இரண்டு இடங்களில் ஹோட்டல் இருக்கிறது. நானும் வருமான வரி, ஜிஎஸ்டி செலுத்துகிறேன்" என ஷில்பா ஷெட்டி கூறி இருக்கிறார்.