14 வருட வாழ்க்கைக்கு பிறகு கணவரை விவாகரத்து செய்த நடிகை- வெளிவந்த தகவல்
ஷில்பா ஷெட்டி
பாலிவுட் சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்திருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி.
தமிழில் பிரபுதேவா ஜோடியாக மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான இவர் கடைசியாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த குஷி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் நடனம் ஆடி இருப்பார், அதன்பின் தமிழ் பக்கம் வரவில்லை.
பின் பாலிவுட்டிலேயே அதிகம் வலம் வந்த ஷில்பா ஷெட்டி இப்போது நடன நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
விவாகரத்து செய்தி
கடந்த 2021ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைதானார், அந்த நேரத்தில் ஷில்பா ஷெட்டி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராஜ் குந்தரா தனது சமூக வலைதளத்தில் நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம் என்று பதிவிட்டு அவர்களின் விவாகரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் ராஜ் குந்தரா-ஷில்பா ஷெட்டி ஜோடியின் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.