ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான பல கோடி சொத்துக்கள் முடக்கம்! அதிர்ச்சி தகவல்
நடிகை ஷில்பா ஷெட்டி ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக ஒருகாலத்தில் இருந்தவர். அவர் தமிழிலும் நடித்து இருக்கிறார்.
ஷில்பா ஷெட்டி பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்துகொண்டார். அவரிடம் இருக்கும் பணத்திற்காக தான் திருமணம் செய்துகொண்டார் என அவரை பலரும் விமர்சிப்பதுண்டு. ஆனால் திருமணம் செய்தபோது நானும் பெரிய ஹீரோயின்தான், என்னிடமும் சொத்து இருக்கிறது என கூறி ஷில்பா ஷெட்டி பதிலடி கொடுத்து இருந்தார்.
சொத்துக்கள் முடக்கம்
ராஜ் குந்திரா மீதான பண மோசடி வழக்கை தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமான 97.79 கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு இருக்கிறது.
மும்பை மற்றும் புனேவில் இருக்கும் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. மும்பையில் ராஜ் குந்திராவிடம் இருந்த 80 கோடி ருபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட்டை மிக குறைந்த தொகைக்கு மனைவி ஷில்பா ஷெட்டி பெயருக்கு மாற்றி இருக்கிறார்.
அந்த சொத்து முடக்கப்படுவதில் இருந்து தப்பிக்க தான் இதை செய்திருக்கிறார்கள் எனவும் சர்ச்சை எழுந்திருக்கிறது.