46 வயது தங்கைக்கு மாப்பிள்ளை தேடும் நடிகை ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டி ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். தற்போது 50 வயதாகும் அவர் இப்போதும் அதே பிட்னெஸ் உடன் உடலை வைத்திருப்பது பற்றி பலரும் ஆச்சர்யமாக பேசுவார்கள்.
ஷில்பா ஷெட்டிக்கு ஷமிதா ஷெட்டி என்ற தங்கை இருக்கிறார். 46 வயதாகும் ஷமிதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மாப்பிள்ளை தேடும் ஷில்பா
இந்நிலையில் சமீபத்தில் கபில் ஷர்மா ஷோவில் பங்கேற்ற ஷில்பா ஷெட்டி தான் தனது தங்கை ஷமிதாவுக்காக தீவிரமாக மாப்பிள்ளை தேடுவதாக கூறி இருக்கிறார்.
"ஆம். அதில் என்ன வெட்கம். நான் பல ஆண்களிடம் நேரடியாகவே சென்று 'உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என கேட்பேன்'.
"நான் ஏன் அதை கேட்கிறேன் என பலரும் யோசிப்பார்கள். ஏனென்றால் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. அதற்கு பிறகு தான் எனது தங்கைக்காக என அவர்களிடம் சொல்வேன்" என ஷில்பா ஷெட்டி கூறி இருக்கிறார்.
மேலும் தனது தங்கையை டேட்டிங் ஆப்பில் சேரும்படியும் ஷில்பா ஷெட்டி அட்வைஸ் கூறி இருக்கிறார்.

திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu