பிரியங்காவிற்கு பதிலாக ஷிவாங்கி தொகுத்து வழங்கவுள்ள நிகழ்ச்சி இதுதான்.. வெளியான ப்ரோமோ வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா.
இவர் தற்போது விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சியான, பிக் பாஸில் கலந்துகொள்ள இருப்பதால், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாத நிலையில் இருக்கிறார்.
இதனால், இவருக்கு பதிலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ஷிவாங்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பிரியங்காவிற்கு பதிலாக ஷிவாங்கி தொகுத்து வழங்க வந்தது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிடையாது, காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சி தான்.
ஆம் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியை இதற்கு முன் ரக்ஷன் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது பிரியங்காவிற்கு பதிலாக ஷிவாங்கி வந்துள்ளார்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..