தனது தந்தையுடன் இணைந்து சிறு வயதில் பாட்டுப்பாடும் சிவாங்கி - இதோ அந்த வீடியோ
சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக பிரபலமானவர் சிவாங்கி.
இதன்பின், அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில், கோமாளியாக களமிறங்கி நம்மை சிரிக்கவும் வைத்தார்.
மேலும், இதற்கிடையே நடைபெற்ற சூப்பர் சிங்கர் 'சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
இதுமட்மின்றி, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிவாங்கி தனது சிறு வயதில் தனது தந்தையுடன் இணைந்து பாட்டுப்பாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இதோ அந்த வீடியோ..