டிவி சானல் பிரபலம் சிவாங்கிக்கு பின்னால் இப்படி ஒரு விசயமா? வேற லெவல் நீங்க - புகைப்படம் இதோ!
சிவாங்கி என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும். பாடகியாக டிவியில் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் நிகழ்ச்சி கலக்கினார். அவரின் பாடும் திறமை பலரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது. அதிலும் அசுரன் படத்தின் எள்ளு வய பூக்கள் பாடலை அவர் பாடியது இன்றும் நம் மனதில் நிலைத்து நிற்கிறது.
இயல்பில் பாடகியாக இருக்கும் அவரிடம் நகைச்சுவை திறமை இருப்பதை வெளியே தெரியவைத்தது என்னவோ குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த சீசனில் போட்டியாளாக வந்தவர் இந்த சீசனில் கோமாளியாக வந்துள்ளார்.
அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர் சிவாங்கி கிருஷ்ண குமார் என தனி யூடுயூப் சேனல் நடத்தி வருகிறார். அதிலுள்ள சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை 1 மில்லியனை எட்டியுள்ளது.
மேலும் அவருக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
படக்குழுவில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.