செஃப் தாமுவாக மாறிய ஷிவாங்கி.. கலைகட்டும் இந்த வார குக் வித் கோமாளி ப்ரோமோ
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
முதல் இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ரசிகர்கள் வரவேற்பில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ரசிகர்களுக்கு பிடித்த பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, குரேஷி கோமாளிகாக மகிழ வைத்து வருகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கெட்டப் போட்டு, அதில் நகைச்சுவை செய்து நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரும் குக் மற்றும் செஃப் போல் கெட்டப் போட்டு கோமாளிகள் வந்துள்ளார்கள்.
செஃப் தாமுவாக மாறிய ஷிவாங்கி
அதில் ஷிவாங்கி, நம் அனைவருக்கும் பிடித்த செஃப் தாமு அவர்கள் போலவே கெட்டப் போட்டு வந்து அசத்தியுள்ளார். அதே போல், ஸ்ருதிகா போல் குரேஷி கெட்டப் போட்டுள்ளார்.
இதோ அந்த ப்ரோமோ..