பிக் பாஸ் ஷிவானியின் சூப்பர் டான்ஸ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ஷிவானி.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிக் பாஸ் சென்று வந்த பிறகு, ஓரிரு படங்களில் கமிட்டாகி வந்த ஷிவானி, தற்போது கோலிவுட்டில் பிஸியான நடிகையாகி இருக்கிறார்.
ஆம், கமலுடன் விக்ரம், ஆர்.ஜே. பாலாஜியுடன் ஒரு படம், வடிவேலுவுடன் நாய் சேகர் returns என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், தொடர்ந்து பல வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்கிறார்.
அந்த வகையில் தற்போது, ரசிகர்கள் கவரும் வகையில் சூப்பராக டான்ஸ் ஆடி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..