ஷிவானி நாராயணனின் அரபிக் குத்து டான்ஸ்: ரொம்ப லேட் என விமர்சிக்கும் ரசிகர்கள்
பிக் பாஸ் புகழ் நடிகை ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு தான் இணையத்தில் அதிகம் பாப்புலர் ஆனார். மிக இளம் வயதிலேயே அவர் சீரியல்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிவிட்ட நிலையில் அவர் பிக் பாஸ் 4ம் சீசனில் பங்கேற்றபோது அவர் தான் ஷோவில் மிக வயது குறைந்தவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் ட்ரெண்டிங் ஆக இருக்கும் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி அவர் ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அவர் பீஸ்ட் விஜய்யின் அரபிக் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறது. அது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.