பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ
ஷிவானி நாராயணன்
தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் தான் இப்போது மக்களுக்கு நெருக்கமானவர்களாக, அதிகம் கொண்டாடப்படும் பிரபலங்களாக உள்ளனர்.
இதனாலேயே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு பிரபலங்கள் கலக்கி வருகிறார்கள். அப்படி சீரியல் நடிகை, திரைப்பட நடிகை, பிக்பாஸ் பிரபலம் என கலக்கியவர் தான் ஷிவானி நாராயணன்.
பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் சரவணன் மீனாட்சி சீசன் 3, ராஜா ராணி, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு 98 நாட்கள் வரை வீட்டில் இருந்தார்.
மாறிய ரூட்
பிக்பாஸ் பிறகு கமல்ஹாசன் நடித்த விக்ரம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான வீட்டில் விசேஷம், வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தற்போது நடிப்பை தாண்டி ஷிவானி நாராயணன் மாடலிங் துறையில் களமிறங்கியுள்ளார். லேட்டஸ்ட் டிசைன் காஸ்ட்யூம் அணிந்து கேட்வாக் செய்த ஷிவானி வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள், நல்ல கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.