ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய பிக் பாஸ் ஷிவானி.. புகைப்படத்தை பாருங்க
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன்.
அதன்பின், கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.
மேலும், தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷிவானி, ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது புதிய ஹேர் ஸ்டைலில், ஹாலிவுட் ஹீரோயின் போல் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
