கன்னட நடிகர் சிவராஜ்குமார் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
சிவராஜ்குமார்
கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவராஜ்குமார். இவர் பிரபல நடிகரும், முன்னாள் கன்னட முதல்வருமான ராஜ்குமாரின் மகன் ஆவார்.
1986ல் வெளிவந்த ஆனந்த் எனும் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து படங்கள் நடித்து கன்னட திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கினார். கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து மிரட்டியிருந்தார்.
சில நிமிடங்கள் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரம் செம மாஸ் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது. மேலும் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்திலும் சிவராஜ்குமார் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.
கண்டிப்பாக இப்படத்திலும் செம மாஸ் நடிப்பை அவரிடமும் எதிர்பார்க்கலாம். ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வரும் சிவராஜ்குமாரின் பிறந்தநாள் இன்று. 63வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகர் சிவராஜ்குமாரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 230 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 6 கோடி வரை சம்பளம் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.