விஜய், அஜித்திற்காக ஷோபா சந்திரசேகர் செய்த விஷயம்- கலக்கல் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட சீசன்கள் பெரியவர்கள், சிறியவர்கள் என சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது.
இப்போது சிறியவர்களுக்கான சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, வாரா வாரம் ஏதாவது ஸ்பெஷல் விஷயங்களும் நிகழ்ச்சியில் நடக்கிறது.
தல-தளபதி
இந்த வாரம் தல-தளபதி பாடல்களின் ஸ்பெஷல், இருவரின் ஹிட் பாடல்களை போட்டியாளர்கள் பாட வேண்டும். இதற்காக குட்டி போட்டியாளர்கள் அனைவரும் ஹிட் பாடல்களை பாட இருக்கிறார்கள்.
சிறப்பு விருந்தினர்
இந்த வார தல-தளபதி ஸ்பெஷல், எனவே சிறப்பு விருந்தினராக விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியின் புரொமோவில் அவர் என்னை இந்த ரவுண்டிற்காக அழைத்ததற்கு நன்றி என பேசுகிறார்.