விஜய் கட்சி தொடங்கியது அறிந்து அவர் அம்மா சொன்ன முதல் வார்த்தை.. என்ன தெரியுமா
விஜய் அரசியல் கட்சி
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என கடந்த பல ஆண்டுகளாகவே பேச்சு நிலவி வந்த நிலையில், இன்று தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்தார்.
இதுவரை விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வந்த நிலையில், இனிமேல் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக செயல்பட உள்ளது.
வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என கூறியுள்ளனர்.
வாழ்த்து தெரிவித்த விஜய்யின் தாய்
விஜய் அரசியல் கட்சியின் தலைவரான நிலையில், திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரும் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் 'வாகை சூட விஜய்' என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.