51 வயதில் பரதநாட்டியத்தில் குத்தாட்டம் ஆடிய நடிகை ஷோபனா.. ரசிகர்கள் ஷாக்..
பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ஷோபனா.
தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக கலக்கி வந்தார்.
ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், கமல் ஹாசன் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார் ஷோபனா.
இவர் கடைசியாக தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கோச்சடையான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஷோபனா, பரதநாட்டியத்தில் வல்லுநர் என்பதை நாம் அறிவோம். அவருடைய பாரதநாட்டியத்திற்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.
இந்நிலையில், தனது 51 வயதில் நடிகை ஷோபானா, பரதநாட்டியத்தில் குத்து பாடலுக்கு நடனமாடி, அனைவரையும் அசரவைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.